Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 24:58 — ஒளி

நம்பிக்கை கொண்டோரே, உங்களுடைய ஊழியர்களும் மேலும் பருவம் அடையாத குழந்தைகளும் (உங்களுடைய அறைகளில் நுழைவதற்கு முன்னர்) அவசியம் அனுமதி கேட்க வேண்டும். இது மூன்று சந்தர்ப்பங்களில் செய்யப்பட வேண்டும் - அதிகாலைத் தொழு கைக்கு முன்னர், பகலில் ஓய்விற்காக நீங்கள் உங்களுடைய ஆடைகளை மாற்றியிருக்கும் போது, மேலும் இரவுத் தொழுகைக்குப் பிறகு. இவை உங்களுக்கு மூன்று அந்தரங்க நேரங் களாகும். மற்றச் சமயங்களில், நீங்கள் ஒருவர் மற்றவருடன் கலந்திருப்பதில் உங்கள் மீதோ அவர்கள் மீதோ தவறு இல்லை. கடவுள் இவ்விதமாக இந்த வெளிப்பாடுகளை உங்களு க்கு தெளிவுபடுத்துகின்றார். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.

[24:57] நம்ப மறுப்பவர்கள் ஒருக்காலும் அத்துடன் அப்படியே தப்பிச் சென்று விடுவார்கள் என்று நினைக்காதீர்.அவர்களுடைய கடைசித் தங்கு மிடம் நரகம் ஆகும்; என்ன ஒரு துன்பகரமான விதி.

[24:59] குழந்தைகள் பருவம் அடைந்து விட்டால், அவர்களுக்கு முன்னர் பருவம் அடைந்தவர்கள் (நுழையும் முன்) அனுமதி கேட்டதைப் போலவே அவர்களும் (நுழையும் முன்) அனுமதி கேட்க வேண்டும். கடவுள் இவ்விதமாக அவருடைய வெளிப்பாடுகளை உங்களுக்குத் தெளிவு படுத்துகின்றார். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.