குர்ஆன் 25:59 — சட்டப்புத்தகம்
அவர்தான் வானங்களையும் பூமியையும், மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன் றையும், ஆறு நாட்களில் படைத்தவர், பின்னர் அனைத்து அதிகாரங்களையும் ஏற்றுக் கொண்டார். மிக்க அருளாளர்; அறிவில் நன்கு ஊன்றியவர்களிடம் அவரைப்பற்றிக் கேட்பீராக.
[25:58] உயிரோடிருக்கும் ஒருவரிடமே உமது உறுதியான நம்பிக்கையை நீர் வைக்க வேண்டும்-ஒருபோதும் இறவாத ஒருவர்- மேலும் அவரைப் புகழவும் துதிக்கவும் செய் வீராக. தன்னுடைய படைப்பினங்களின் பாவங்களை அவர் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.
[25:60] “மிக்க அருளாளரின் முன்னர் சிரம் பணியுங்கள்,” என்று அவர்களிடம் கூறப்படும் போது, அவர்கள், “மிக்க அருளாளர் என்றால் என்ன? நீர் ஆதரிப்பவற்றிற்கு நாங்கள் சிரம்பணிய வேண்டுமா?” என்று கூறுகின் றனர். இவ்விதமாக, இது அவர்களுடைய வெறுப்பைத்தான் அதிகரிக்கின்றது.