Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 25:58 — சட்டப்புத்தகம்

உயிரோடிருக்கும் ஒருவரிடமே உமது உறுதியான நம்பிக்கையை நீர் வைக்க வேண்டும்-ஒருபோதும் இறவாத ஒருவர்- மேலும் அவரைப் புகழவும் துதிக்கவும் செய் வீராக. தன்னுடைய படைப்பினங்களின் பாவங்களை அவர் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.

[25:57] “நான் உங்களிடம் பணம் எதுவும் கேட்க வில்லை. நான் விரும்புவதெல்லாம் உங்கள் இரட்சகரிடம் செல்லும் சரியான பாதையைக் கண்டுகொள்ள உங்களுக்கு உதவி செய்வது தான், இதனை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்வதாக இருந்தால்,” என்று கூறுவீராக.

[25:59] அவர்தான் வானங்களையும் பூமியையும், மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன் றையும், ஆறு நாட்களில் படைத்தவர், பின்னர் அனைத்து அதிகாரங்களையும் ஏற்றுக் கொண்டார். மிக்க அருளாளர்; அறிவில் நன்கு ஊன்றியவர்களிடம் அவரைப்பற்றிக் கேட்பீராக.