குர்ஆன் 25:60 — சட்டப்புத்தகம்
“மிக்க அருளாளரின் முன்னர் சிரம் பணியுங்கள்,” என்று அவர்களிடம் கூறப்படும் போது, அவர்கள், “மிக்க அருளாளர் என்றால் என்ன? நீர் ஆதரிப்பவற்றிற்கு நாங்கள் சிரம்பணிய வேண்டுமா?” என்று கூறுகின் றனர். இவ்விதமாக, இது அவர்களுடைய வெறுப்பைத்தான் அதிகரிக்கின்றது.
[25:59] அவர்தான் வானங்களையும் பூமியையும், மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன் றையும், ஆறு நாட்களில் படைத்தவர், பின்னர் அனைத்து அதிகாரங்களையும் ஏற்றுக் கொண்டார். மிக்க அருளாளர்; அறிவில் நன்கு ஊன்றியவர்களிடம் அவரைப்பற்றிக் கேட்பீராக.
[25:61] விண்ணில் நட்சத்திரக் கூட்டங்களை அமைத்தவர், மேலும் அதில் ஒரு விளக்கையும், மற்றும் பிரகாசிக்கும் ஒரு நிலவையும் அமைத்த அந்த ஒருவர் பாக்கியம் மிக்கவர்.