Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 25:61 — சட்டப்புத்தகம்

விண்ணில் நட்சத்திரக் கூட்டங்களை அமைத்தவர், மேலும் அதில் ஒரு விளக்கையும், மற்றும் பிரகாசிக்கும் ஒரு நிலவையும் அமைத்த அந்த ஒருவர் பாக்கியம் மிக்கவர்.

[25:60] “மிக்க அருளாளரின் முன்னர் சிரம் பணியுங்கள்,” என்று அவர்களிடம் கூறப்படும் போது, அவர்கள், “மிக்க அருளாளர் என்றால் என்ன? நீர் ஆதரிப்பவற்றிற்கு நாங்கள் சிரம்பணிய வேண்டுமா?” என்று கூறுகின் றனர். இவ்விதமாக, இது அவர்களுடைய வெறுப்பைத்தான் அதிகரிக்கின்றது.

[25:62] அவர்தான் மாறி மாறி வருமாறு இரவையும் பகலையும் வடிவமைத்தவர்: கவனத்தில் எடுத்துக்கொள்ள, அல்லது நன்றியுடையவராக இருக்க விரும்புவோருக்குப் போதுமானதொரு சான்று.