குர்ஆன் 25:74 — சட்டப்புத்தகம்
மேலும் அவர்கள், “எங்கள் இரட்சகரே, எங்களுடைய வாழ்க்கைத் துணைகளையும் மற்றும் பிள்ளைகளையும் எங்களுடைய இன்பத்திற்கானதொரு மூலாதாரமாக இருக்கச் செய்வீராக, மேலும் நன்னெறி யாளர்களின் முன் அணியில் எங்களை வைப்பீராக” என்று கூறுவார்கள்.
[25:73] அவர்களுடைய இரட்சகரின் வெளிப்பாடு களால் நினைவூட்டப்படும்போது, அவர்கள் குருடர்களாகவும், செவிடர்களாகவும் இருந்ததைப் போன்று அவற்றின் பால் அவர்கள் ஒரு போதும் நடந்து கொள்ள மாட்டார்கள்.
[25:75] தங்களுடைய உறுதிப்பாட்டிற்குப் பிரதி பலனாக சுவனத்தை அடைபவர்கள் இவர்கள் தான்; இன்பகரமான வாழ்த்துக்களுடனும் அமைதியுடனும் அங்கே அவர்கள் வரவேற்கப்படுவார்கள்.