குர்ஆன் 26:50 — கவிஞர்கள்
அவர்கள் கூறினர், “ இது எங்களுடைய தீர்மானத்தை மாற்றிவிடாது; எங்கள் இரட்சகரிடமே நாங்கள் திரும்பிச் செல்வோம்.
[26:49] அவன், “ நான் உங்களுக்கு அனுமதி கொடுப் பதற்கு முன்னர் அவருடன் நீங்கள் நம்பிக்கை கொண்டு விட்டீர்களா? உங்களுக்கு மந்திரத்தைக் கற்றுக்கொடுத்த, உங்களுடைய குருவாகத்தான் அவர் இருக்க வேண்டும். நிச்சயமாக நீங்கள் கண்டு கொள்வீர்கள். நான் உங்களுடைய மாறுகைகள் மற்றும் மாறுகால் களை துண்டித்து விடுவேன். உங்கள் அனை வரையும் நான் சிலுவையில் அறைந்து கொன்று விடுவேன்”என்று கூறினான்.
[26:51] “முக்கியமாக, நாங்கள் முதல் நம்பிக்கை யாளர்களாக உள்ளோம் என்பதால் , எங்கள் இரட்சகர் எங்களுக்கு, எங்களுடைய பாவங் களை மன்னிப்பார் என நாங்கள் நம்பி எதிர்பார்க்கின்றோம்.”