குர்ஆன் 27:12 — எறும்பு
“உமது கரத்தை உமது சட்டைப்பைக்குள் வைப்பீராக; ஒரு மாசுமின்றி, வெண்மையாக அது வெளியில் வரும். இவை ஃபேரோவிற்கும் அவனுடைய சமூகத்தாருக்குமான ஒன்பது அற்புதங்களில் உள்ளவையாகும், ஏனெனில் அவர்கள் தீய மக்களாக இருக்கின்றனர்.”
[27:11] “ஒரு வரம்புமீறலைச் செய்தவர்களைத் தவிர, பாவம் புரிந்துவிட்ட பின்னர் நன்னெறியை அவர்கள் மாற்றியமைக்கும் பட்சத்தில்; நான் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[27:13] தெளிவான, மற்றும் ஆழ்ந்த நமது அற்புதங்கள் அவர்கள் முன்வைக்கப்பட்ட போது, அவர்கள், “இது தெளிவானதொரு மாயாஜாலமே ஆகும்” என்று கூறினார்கள்.