Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:13 — எறும்பு

தெளிவான, மற்றும் ஆழ்ந்த நமது அற்புதங்கள் அவர்கள் முன்வைக்கப்பட்ட போது, அவர்கள், “இது தெளிவானதொரு மாயாஜாலமே ஆகும்” என்று கூறினார்கள்.

[27:12] “உமது கரத்தை உமது சட்டைப்பைக்குள் வைப்பீராக; ஒரு மாசுமின்றி, வெண்மையாக அது வெளியில் வரும். இவை ஃபேரோவிற்கும் அவனுடைய சமூகத்தாருக்குமான ஒன்பது அற்புதங்களில் உள்ளவையாகும், ஏனெனில் அவர்கள் தீய மக்களாக இருக்கின்றனர்.”

[27:14] அவைகளை அவர்கள் ஏற்க மறுத்தனர், மேலும் அவர்களுடைய ஆணவத்தின் காரணத்தால் தங்களுடைய தவறான வழிகளில் முற்றிலும் உறுதியான நம்பிக்கையை அடைந்திருந்தனர். தீமை செய்தவர்களுக்கான பின்விளைவுகளைக் கவனித்துப் பார்ப்பீராக.