குர்ஆன் 27:37 — எறும்பு
(ஹூப்போவிடம் அவர் கூறினார்,) “அவர்களிடம் திரும்பிச் செல், மேலும் அவர்களால் கற்பனையும் செய்யமுடியாத படைகளுடன் அவர்களிடம் நாம் வருவோம் (என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும்). இழிவடைந்தவர்களாகவும், சிறுமைப்படுத்தப்பட்டவர்களாகவும் அவர்களை நாம் வெளியேற்றுவோம்”.
[27:36] ஹூப்போ ஸாலமனிடம் திரும்பிய போது (அவன் அவரிடம் செய்தியைச் சொன்னான்), மேலும் அவர் (ஷீபாவின் மக்களுக்கு): “எனக்கு நீங்கள் பணம் தருகின்றீர்களா? கடவுள் எனக்குத் தந்திருப்பது, உங்களுக்கு அவர் தந்திருப்பதை விட மிகவும் மேலானது. நீங்கள் தான் இத்தகைய பரிசுகளில் ஆனந்தம் அடைகின்றீர்கள்” என்று மறுமொழி அளித்தார்.
[27:38] அவர், “என் பிரதானிகளே, அடிபணிந்தவர்களாக இங்கே அவர்கள் வருவதற்கு முன்னர், அவளுடைய மாளிகையை என்னிடம் கொண்டு வர உங்களில் எவரால் இயலும்?” என்று கூறினார்.