Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:36 — எறும்பு

ஹூப்போ ஸாலமனிடம் திரும்பிய போது (அவன் அவரிடம் செய்தியைச் சொன்னான்), மேலும் அவர் (ஷீபாவின் மக்களுக்கு): “எனக்கு நீங்கள் பணம் தருகின்றீர்களா? கடவுள் எனக்குத் தந்திருப்பது, உங்களுக்கு அவர் தந்திருப்பதை விட மிகவும் மேலானது. நீங்கள் தான் இத்தகைய பரிசுகளில் ஆனந்தம் அடைகின்றீர்கள்” என்று மறுமொழி அளித்தார்.

[27:35] “நான் அவர்களுக்கு ஒரு பரிசை அனுப்புகின்றேன்; தூதர்கள் திரும்பக் கொண்டு வருவது என்ன என நாம் காண்போம்.”

[27:37] (ஹூப்போவிடம் அவர் கூறினார்,) “அவர்களிடம் திரும்பிச் செல், மேலும் அவர்களால் கற்பனையும் செய்யமுடியாத படைகளுடன் அவர்களிடம் நாம் வருவோம் (என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும்). இழிவடைந்தவர்களாகவும், சிறுமைப்படுத்தப்பட்டவர்களாகவும் அவர்களை நாம் வெளியேற்றுவோம்”.