குர்ஆன் 27:35 — எறும்பு
“நான் அவர்களுக்கு ஒரு பரிசை அனுப்புகின்றேன்; தூதர்கள் திரும்பக் கொண்டு வருவது என்ன என நாம் காண்போம்.”
[27:34] அவள் கூறினாள், “மன்னர்கள், அவர்கள் படையெடுக்கும் எந்த நாட்டையும் சீர்குலைத்து விடுகின்றனர், அதன் கண்ணியத்திற்குரிய மக்களை சிறுமைப்படுத்தி விடுகின்றனர். இதுதான் அவர்கள் வழக்கமாகச் செய்வது.
[27:36] ஹூப்போ ஸாலமனிடம் திரும்பிய போது (அவன் அவரிடம் செய்தியைச் சொன்னான்), மேலும் அவர் (ஷீபாவின் மக்களுக்கு): “எனக்கு நீங்கள் பணம் தருகின்றீர்களா? கடவுள் எனக்குத் தந்திருப்பது, உங்களுக்கு அவர் தந்திருப்பதை விட மிகவும் மேலானது. நீங்கள் தான் இத்தகைய பரிசுகளில் ஆனந்தம் அடைகின்றீர்கள்” என்று மறுமொழி அளித்தார்.