Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:41 — எறும்பு

அவர், “அவளுடைய மாளிகையை அவளுக்காக நீங்கள் மாற்றியமைத்து விடுங்கள். அவள் வழிகாட்டப்பட்டவளாக இருக்கப் போகின்றாளா, அல்லது தவறாக வழிநடத்தப்பட்டவர்களுடன் தொடரப் போகின்றாளா என்பதை நாம் காண்போம்” என்று கூறினார்.

[27:40] புத்தகத்திலிருந்து அறிவைப் பெற்றிருந்த ஒன்று, “உமது கண்ணிமைப்பதற்குள் அதனை உம்மிடம் கொண்டு வர என்னால் இயலும்” என்று கூறியது. அவருக்கு முன்னால் அது நிர்மாணிக்கப் பட்டிருப்பதை அவர் கண்டதும், அவர்,“இது என் இரட்சகரிடமிருந்து ஓர் அருட்கொடையாகும், நான் நன்றியுடையவனாக இருக்கின்றேனா அல்லது நன்றிகெட்டவனா என்று காட்டு வதற்காக, இதன் மூலம் அவர் என்னைச் சோதிக்கின்றார். எவரொருவர் நன்றியுடையவராக இருக்கின்றாரோ, அவர் தன் சொந்த நலனிற்காகவே நன்றியுடையவராக இருக் கின்றார், மேலும் ஒருவன் நன்றிகெட்டவனாக மாறிவிட்டால், பின்னர் என்னுடைய இரட்சகர் அவன் பால் எந்தத் தேவையும் இல்லாதவர், மிக்க கண்ணிய முடையவர்” என்று கூறினார்.

[27:42] அவள் வருகை தந்தபோது, அவளிடம், “உன் மாளிகை இதைப் போன்றுதான் தோற்றமளிக்குமா?” என்று கேட்கப்பட்டது. அவள், “இதுதான் அது என்று தோன்றுகிறது” என்று கூறினாள். (ஸாலமன் கூறினார்,) “அவள் என்ன செய்யப் போகின்றாள் என்பதை நாங்கள் முன்னரே அறிந்திருந்தோம், மேலும் நாங்கள் ஏற்கனவே அடிபணிந்தவர்களாக இருந்தோம்”.