குர்ஆன் 27:42 — எறும்பு
அவள் வருகை தந்தபோது, அவளிடம், “உன் மாளிகை இதைப் போன்றுதான் தோற்றமளிக்குமா?” என்று கேட்கப்பட்டது. அவள், “இதுதான் அது என்று தோன்றுகிறது” என்று கூறினாள். (ஸாலமன் கூறினார்,) “அவள் என்ன செய்யப் போகின்றாள் என்பதை நாங்கள் முன்னரே அறிந்திருந்தோம், மேலும் நாங்கள் ஏற்கனவே அடிபணிந்தவர்களாக இருந்தோம்”.
[27:41] அவர், “அவளுடைய மாளிகையை அவளுக்காக நீங்கள் மாற்றியமைத்து விடுங்கள். அவள் வழிகாட்டப்பட்டவளாக இருக்கப் போகின்றாளா, அல்லது தவறாக வழிநடத்தப்பட்டவர்களுடன் தொடரப் போகின்றாளா என்பதை நாம் காண்போம்” என்று கூறினார்.
[27:43] கடவுள்-க்குப் பதிலாக இணைத்தெய்வங்களை வழிப்பட்டதனால் திசை திருப்பப் பட்டவளாக அவள் இருந்தாள்; நம்ப மறுக்கும் மக்களைச் சேர்ந்தவளாக அவள் இருந்தாள்.