Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:44 — எறும்பு

அவளிடம், “மாளிகையின் உள்ளே செல்” என்று கூறப்பட்டது. அதன் உட்புறத்தை அவள் கண்டபோது, அதனை ஒரு தண்ணீர் குளம் என்று எண்ணினாள், மேலும் அவள் (தன் ஆடையை உயர்த்தியவளாக,) தன்னுடைய கால்களை வெளிப்படுத்தினாள். அவர், “இதன் உட்புறமானது இப்போது பளிங்கினால் மேவப்பட்டுள்ளது” என்று கூறினார். அவள், “என் இரட்சகரே, நான் எனது ஆன்மாவிற்குத் தீங்கிழைத்துக் கொண்டேன். இப்போது நான் ஸாலமனுடன் பிரபஞ்சத்தின் இரட்சகரான கடவுள்-க்கு அடிபணிகின்றேன்” என்று கூறினாள்.

[27:43] கடவுள்-க்குப் பதிலாக இணைத்தெய்வங்களை வழிப்பட்டதனால் திசை திருப்பப் பட்டவளாக அவள் இருந்தாள்; நம்ப மறுக்கும் மக்களைச் சேர்ந்தவளாக அவள் இருந்தாள்.

[27:45] “நீங்கள் கடவுள்-ஐ வழிபட வேண்டும்” என்று கூறியவராக, தமூதுகளிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை நாம் அனுப்பினோம். ஆனால் அவர்கள் சச்சரவு செய்கின்ற இரு பிரிவினர்களாக மாறினார்கள்.