குர்ஆன் 27:45 — எறும்பு
“நீங்கள் கடவுள்-ஐ வழிபட வேண்டும்” என்று கூறியவராக, தமூதுகளிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை நாம் அனுப்பினோம். ஆனால் அவர்கள் சச்சரவு செய்கின்ற இரு பிரிவினர்களாக மாறினார்கள்.
[27:44] அவளிடம், “மாளிகையின் உள்ளே செல்” என்று கூறப்பட்டது. அதன் உட்புறத்தை அவள் கண்டபோது, அதனை ஒரு தண்ணீர் குளம் என்று எண்ணினாள், மேலும் அவள் (தன் ஆடையை உயர்த்தியவளாக,) தன்னுடைய கால்களை வெளிப்படுத்தினாள். அவர், “இதன் உட்புறமானது இப்போது பளிங்கினால் மேவப்பட்டுள்ளது” என்று கூறினார். அவள், “என் இரட்சகரே, நான் எனது ஆன்மாவிற்குத் தீங்கிழைத்துக் கொண்டேன். இப்போது நான் ஸாலமனுடன் பிரபஞ்சத்தின் இரட்சகரான கடவுள்-க்கு அடிபணிகின்றேன்” என்று கூறினாள்.
[27:46] அவர், “என் சமூகத்தாரே, நல்ல செயல்களுக்குப் பதிலாகத் தீமைகளைப் புரிய நீங்கள் ஏன் அவசரப்படுகின்றீர்கள்? பாவ மன்னிப்பிற்காகக் கடவுள்-ஐ நீங்கள் இறைஞ்சிப் பிரார்த்தித்தால் மட்டுமே, நீங்கள் கருணையை அடையலாம்” என்று கூறினார்.