Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:46 — எறும்பு

அவர், “என் சமூகத்தாரே, நல்ல செயல்களுக்குப் பதிலாகத் தீமைகளைப் புரிய நீங்கள் ஏன் அவசரப்படுகின்றீர்கள்? பாவ மன்னிப்பிற்காகக் கடவுள்-ஐ நீங்கள் இறைஞ்சிப் பிரார்த்தித்தால் மட்டுமே, நீங்கள் கருணையை அடையலாம்” என்று கூறினார்.

[27:45] “நீங்கள் கடவுள்-ஐ வழிபட வேண்டும்” என்று கூறியவராக, தமூதுகளிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை நாம் அனுப்பினோம். ஆனால் அவர்கள் சச்சரவு செய்கின்ற இரு பிரிவினர்களாக மாறினார்கள்.

[27:47] அவர்கள், “நாங்கள் உம்மை, எங்களுக்கு ஒரு கெட்ட சகுனமாக கருதுகின்றோம், உம்மையும் உம்முடன் சேர்ந்து கொண்டவர்களையும் என்று கூறினார்கள். அவர், “உங்களுடைய சகுனம் கடவுள்-ஆல் முற்றிலும் கட்டுப்படுத்தப் படுகின்றது. உண்மையில், நீங்கள் வழிதவறுகின்ற மக்களாக இருக்கின்றீர்கள்” என்று கூறினார்.