Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:59 — எறும்பு

“புகழ் அனைத்தும் கடவுள்-க்குரியது, மேலும் அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட அவருடைய அடியார்கள் மீது அமைதி நிலவுவதாக. கடவுள் மேலானவரா, அல்லது சில மனிதர்கள் அமைத்துக் கொள்கின்ற இணைத்தெய்வங்களா?” என்று கூறுவீராக.

[27:58] குறிப்பிட்டதொரு பொழிவைக் கொண்டு அவர்களை நாம் பொழிந்தோம். எச்சரிக்கப்பட்ட மக்களாக இருந்தவர்களுக்கு துன்பகரமான தொரு பொழிவாக அது இருந்தது.

[27:60] வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த ஒருவர் யார்? எதன் மூலம் எழில் நிறைந்த தோட்டங்களை நாம் உருவாக்குகின்றோமோ, அந்த தண்ணீரை விண்ணிலிருந்து உங்களுக்கு இறக்கி அனுப்புகின்ற அந்த ஒருவர் யார்- அதன் மரங்களை நீங்கள் உற்பத்தி செய்ய சாத்தியமில்லையே? கடவுள்-உடன் மற்றொரு தெய்வமா? உண்மையில், அவர்கள் வழி தவறிச் சென்று விட்ட மக்களாகவே இருக்கின்றனர்.