குர்ஆன் 27:89 — எறும்பு
(தங்களுடைய பதிவேடுகளில்) நல்ல செயல் களைக் கொண்டு வருபவர்கள் மிகச் சிறப்பான வெகுமதிகளைப் பெறுவார்கள், மேலும் அந் நாளின் திகில்களிலிருந்து அவர்கள் பூரணமான பாதுகாப்புடன் இருப்பார்கள்.
[27:88] மலைகளை நீர் பார்க்கும் போது, அவை அசையாமல் நிற்பதாக நீர் நினைக்கின்றீர். ஆனால் அவை மேகங்களைப் போல் நகர்கின்றன. ஒவ்வொன்றையும் மிகச் சரியாக ஆக்கிய, கடவுள்-ன் உற்பத்தி இவ்விதமானதாகும். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் அவர் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.
[27:90] தீய காரியங்களைக் கொண்டு வருவோரைப் பொறுத்தவரை, அவர்கள் நரகத்திற்குள் நிர்ப் பந்திக்கப்படுவார்கள். நீங்கள் செய்தவற்றிற் குத்தான் நீங்கள் கூலி கொடுக்கப்படுகின்றீர்கள் அல்லவா?