Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 28:15 — சரித்திரம்

மக்களால் அடையாளம் கண்டுகொள்ளப்படாத நிலையில், ஒருமுறை எதிர்பாராதவிதமாக அவர் நகருக்குள் நுழைந்துவிட்டார். இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை அவர் கண்டார்; ஒருவன் அவருடைய சமூகத் தாரிலிருந்து (ஓர் எபிரேயனாக) இருந்தான், மேலும் மற்றொருவன் அவருடைய விரோதி களிலிருந்து (ஓர் எகிப்தியனாக) இருந்தான். அவருடைய சமூகத்தாரிலிருந்தவன் தன்னுடைய விரோதிக்கு எதிராக அவரை உதவிக்கு அழைத்தான். மோஸஸ் அவனைக் குத்தினார், அவனைக் கொன்று விட்டார். அவர், “இது சாத்தானின் வேலையாகும்; அவன் மெய்யான ஒரு விரோதி, மேலும் ஒரு தீவிரமான வழிதவறச் செய்பவன் ஆவான்” என்று கூறினார்.

[28:14] அவர் பக்குவமும் பலமும் அடைந்த போது, ஞானத்தையும் மற்றும் அறிவையும் கொண்டு அவருக்கு நாம் கொடையளித்தோம். இவ்வித மாகவே நன்னெறியாளர்களுக்கு நாம் வெகுமதியளிக்கின்றோம்.

[28:16] அவர், “என் இரட்சகரே, நான் என் ஆன்மாவிற்குத் தீங்கிழைத்துக் கொண்டேன். தயவுசெய்து என்னை மன்னிப்பீராக,” என்று கூறினார். மேலும் அவர் அவரை மன்னித்தார். அவர்தான் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.