குர்ஆன் 28:17 — சரித்திரம்
அவர், “என் இரட்சகரே, என் மீதான உமது அருட்கொடைகளுக்குப் பகரமாக, குற்றவாளி களுக்கு ஓர் ஆதரவாளனாக நான் ஒருபோதும் இருக்க மாட்டேன்” என்று கூறினார்.
[28:16] அவர், “என் இரட்சகரே, நான் என் ஆன்மாவிற்குத் தீங்கிழைத்துக் கொண்டேன். தயவுசெய்து என்னை மன்னிப்பீராக,” என்று கூறினார். மேலும் அவர் அவரை மன்னித்தார். அவர்தான் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[28:18] காலையில், அச்சத்துடனும் மேலும் விழிப்புடனும், அவர் நகரத்தில் இருந்தார். முந்திய தினம் அவருடைய உதவியைத் தேடியவன், மீண்டும் அவரிடம் உதவி கேட்டான். மோஸஸ் அவனிடம், “மெய்யாகவே நீ தொந்தரவை உருவாக்கும் ஒருவனாக இருக்கின்றாய்” என்று கூறினார்.