குர்ஆன் 28:18 — சரித்திரம்
காலையில், அச்சத்துடனும் மேலும் விழிப்புடனும், அவர் நகரத்தில் இருந்தார். முந்திய தினம் அவருடைய உதவியைத் தேடியவன், மீண்டும் அவரிடம் உதவி கேட்டான். மோஸஸ் அவனிடம், “மெய்யாகவே நீ தொந்தரவை உருவாக்கும் ஒருவனாக இருக்கின்றாய்” என்று கூறினார்.
[28:17] அவர், “என் இரட்சகரே, என் மீதான உமது அருட்கொடைகளுக்குப் பகரமாக, குற்றவாளி களுக்கு ஓர் ஆதரவாளனாக நான் ஒருபோதும் இருக்க மாட்டேன்” என்று கூறினார்.
[28:19] அவர்களுடைய பொதுவான விரோதியை அவர் தாக்க முற்படும் முன்னர், அவன், “மோஸஸே, நேற்று மற்றொரு மனிதனை நீர் கொலை செய்ததைப் போல, என்னையும் நீர் கொன்று விட விரும்புகின்றீரா? கண்கூடாக, பூமியின் மீது ஒரு கொடுங்கோலனாக இருக்கவே நீர் விரும்புகின்றீர்; நன்னெறியாளராக இருக்க நீர் விரும்பவில்லை” என்று கூறினான்.