Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 28:19 — சரித்திரம்

அவர்களுடைய பொதுவான விரோதியை அவர் தாக்க முற்படும் முன்னர், அவன், “மோஸஸே, நேற்று மற்றொரு மனிதனை நீர் கொலை செய்ததைப் போல, என்னையும் நீர் கொன்று விட விரும்புகின்றீரா? கண்கூடாக, பூமியின் மீது ஒரு கொடுங்கோலனாக இருக்கவே நீர் விரும்புகின்றீர்; நன்னெறியாளராக இருக்க நீர் விரும்பவில்லை” என்று கூறினான்.

[28:18] காலையில், அச்சத்துடனும் மேலும் விழிப்புடனும், அவர் நகரத்தில் இருந்தார். முந்திய தினம் அவருடைய உதவியைத் தேடியவன், மீண்டும் அவரிடம் உதவி கேட்டான். மோஸஸ் அவனிடம், “மெய்யாகவே நீ தொந்தரவை உருவாக்கும் ஒருவனாக இருக்கின்றாய்” என்று கூறினார்.

[28:20] நகரின் மற்றொரு புறத்திலிருந்து ஒரு மனிதர், “மோஸஸே, மக்கள் உம்மைக் கொன்று விடத் திட்டமிடுகின்றனர். நீர் உடனடியாகப் புறப்பட்டு விடுவதே மேலானதாகும். நான் உமக்கு நல்ல அறிவுரையே கூறுகின்றேன்” என்று கூறியவராக ஓடி வந்தார்.