குர்ஆன் 28:20 — சரித்திரம்
நகரின் மற்றொரு புறத்திலிருந்து ஒரு மனிதர், “மோஸஸே, மக்கள் உம்மைக் கொன்று விடத் திட்டமிடுகின்றனர். நீர் உடனடியாகப் புறப்பட்டு விடுவதே மேலானதாகும். நான் உமக்கு நல்ல அறிவுரையே கூறுகின்றேன்” என்று கூறியவராக ஓடி வந்தார்.
[28:19] அவர்களுடைய பொதுவான விரோதியை அவர் தாக்க முற்படும் முன்னர், அவன், “மோஸஸே, நேற்று மற்றொரு மனிதனை நீர் கொலை செய்ததைப் போல, என்னையும் நீர் கொன்று விட விரும்புகின்றீரா? கண்கூடாக, பூமியின் மீது ஒரு கொடுங்கோலனாக இருக்கவே நீர் விரும்புகின்றீர்; நன்னெறியாளராக இருக்க நீர் விரும்பவில்லை” என்று கூறினான்.
[28:21] அச்சத்துடனும், மேலும் விழிப்புடனும் அவர் நகரை விட்டுத் தப்பி ஓடினார். அவர், “என் இரட்சகரே, அடக்குமுறை செய்கின்ற இம் மக்களிடமிருந்து என்னைக் காப்பீராக” என்று கூறினார்.