குர்ஆன் 28:23 — சரித்திரம்
மித்யனின் நீர்நிலையை அவர் அடைந்த போது, மக்களில் ஒரு கூட்டத்தினர் நீர் எடுத்துக் கொண்டிருப்பதை அவர் கண்டார், மேலும் ஓரத்தில் இரு பெண்கள் காத்துக் கொண்டிருப்பதையும் அவர் கவனித்தார். அவர் “உங்களுக்கு வேண்டியதென்ன?” என்று கூறினார். அவர்கள், “கூட்டம் கலைந்து செல்லும் வரை, எங்களால் நீர் எடுத்துக் கொள்ள முடியவில்லை, மேலும் எங்கள் தந்தையோ வயது முதிர்ந்த ஒருவராக இருக்கின்றார்” என்று கூறினார்கள்.
[28:22] மித்யனை நோக்கி அவர் பிரயாணித்தவாறு, அவர், “என் இரட்சகர் என்னைச் சரியான பாதையில் வழிநடத்துவாராக” என்று கூறினார்.
[28:24] அவர்களுக்காக அவர் தண்ணீர் எடுத்துக் கொடுத்தார், பின்னர், “என் இரட்சகரே, எந்த ஒரு வாழ்வாதாரத்தை நீர் எனக்கு அனுப்பினாலும், அதற்காக நான் கடும் தேவையுடையவராக இருக்கின்றேன்” எனக் கூறியவாறு நிழலின் பால் திரும்பிச் சென்றார்.