Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 28:27 — சரித்திரம்

அவர், “எட்டு புனிதயாத்திரைகள் எனக்கு நீர் வேலை செய்வதற்குப் பிரதியுபகாரமாக, என்னு டைய இரு மகள்களில் ஒருவரை உமக்கு திருமணம் முடித்துத் தர நான் விரும்புகின்றேன்; அவற்றை நீர் பத்தாக ஆக்கினால், அது உமது சொந்த விருப்பத்தின்பாற்பட்டதாகும். இந்த விஷயத்தை உமக்கு மிகவும் கடினமானதாக்கி விட நான் விரும்பவில்லை. கடவுள் நாடினால், என்னை நீர், நன்னெறியாளராகக் காண்பீர்” என்று கூறினார்.

[28:26] அவ்விரு பெண்களில் ஒருவர், “என் தந்தையே, அவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்வீராக. அவர் கூலிக்கு அமர்த்திக்கொள்ள மிகச் சிறந்த ஒருவராக உள்ளார், ஏனெனில் அவர் வலிமையுடையவராகவும் மேலும் நேர்மை யுடையவராகவும் இருக்கின்றார்” என்று கூறினார்.

[28:28] அவர், “எனக்கும் உமக்கும் இடையில் இது ஓர் உடன்படிக்கையாகும். எந்த ஒரு கால கட்டத்தை நான் பூர்த்தி செய்தபோதிலும், அவற்றில் எந்த ஒன்றிற்கும் நீர் வெறுப்புக்கொள்ள மாட்டீர். நாம் கூறியவற்றிற்குக் கடவுள் உத்தரவாதம் அளிப்பவராக இருக்கின்றார்” என்று கூறினார்.