குர்ஆன் 28:26 — சரித்திரம்
அவ்விரு பெண்களில் ஒருவர், “என் தந்தையே, அவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்வீராக. அவர் கூலிக்கு அமர்த்திக்கொள்ள மிகச் சிறந்த ஒருவராக உள்ளார், ஏனெனில் அவர் வலிமையுடையவராகவும் மேலும் நேர்மை யுடையவராகவும் இருக்கின்றார்” என்று கூறினார்.
[28:25] விரைவில், அவ்விரு பெண்களில் ஒருவர் அவரை வெட்கத்துடன் அணுகினார், மேலும், “எங்களுக்கு தண்ணீர் எடுத்துக் கொடுத்த தற்கான கூலியைத் தருவதற்காக என் தந்தையார் உம்மை அழைக்கின்றார்” என்று கூறினார். அவர் அவரைச் சந்தித்து, மேலும் தனது கதையை அவரிடம் கூறியபோது, அவர், “அச்சம் கொள்ளாதீர். அடக்குமுறை செய்கின்ற மக்களிடமிருந்து நீர் காப்பாற்றப் பட்டு விட்டீர்” என்று கூறினார்.
[28:27] அவர், “எட்டு புனிதயாத்திரைகள் எனக்கு நீர் வேலை செய்வதற்குப் பிரதியுபகாரமாக, என்னு டைய இரு மகள்களில் ஒருவரை உமக்கு திருமணம் முடித்துத் தர நான் விரும்புகின்றேன்; அவற்றை நீர் பத்தாக ஆக்கினால், அது உமது சொந்த விருப்பத்தின்பாற்பட்டதாகும். இந்த விஷயத்தை உமக்கு மிகவும் கடினமானதாக்கி விட நான் விரும்பவில்லை. கடவுள் நாடினால், என்னை நீர், நன்னெறியாளராகக் காண்பீர்” என்று கூறினார்.