குர்ஆன் 28:25 — சரித்திரம்
விரைவில், அவ்விரு பெண்களில் ஒருவர் அவரை வெட்கத்துடன் அணுகினார், மேலும், “எங்களுக்கு தண்ணீர் எடுத்துக் கொடுத்த தற்கான கூலியைத் தருவதற்காக என் தந்தையார் உம்மை அழைக்கின்றார்” என்று கூறினார். அவர் அவரைச் சந்தித்து, மேலும் தனது கதையை அவரிடம் கூறியபோது, அவர், “அச்சம் கொள்ளாதீர். அடக்குமுறை செய்கின்ற மக்களிடமிருந்து நீர் காப்பாற்றப் பட்டு விட்டீர்” என்று கூறினார்.
[28:24] அவர்களுக்காக அவர் தண்ணீர் எடுத்துக் கொடுத்தார், பின்னர், “என் இரட்சகரே, எந்த ஒரு வாழ்வாதாரத்தை நீர் எனக்கு அனுப்பினாலும், அதற்காக நான் கடும் தேவையுடையவராக இருக்கின்றேன்” எனக் கூறியவாறு நிழலின் பால் திரும்பிச் சென்றார்.
[28:26] அவ்விரு பெண்களில் ஒருவர், “என் தந்தையே, அவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்வீராக. அவர் கூலிக்கு அமர்த்திக்கொள்ள மிகச் சிறந்த ஒருவராக உள்ளார், ஏனெனில் அவர் வலிமையுடையவராகவும் மேலும் நேர்மை யுடையவராகவும் இருக்கின்றார்” என்று கூறினார்.