குர்ஆன் 28:44 — சரித்திரம்
மோஸஸிற்கு நாம் கட்டளையைக் கொடுத்த பொழுது மேற்கத்திய மலையின் சரிவில் நீர் இருக்கவில்லை; நீர் ஒரு சாட்சியாக* இருக்க வில்லை.
[28:43] முந்திய தலைமுறையினரை அழித்து விட்ட பின்னர், மேலும் அவர்கள் மூலமாக உதாரணங்களை அமைத்து விட்ட பின்னர்-மக்களுக்கு அறிவூட்ட லையும் மேலும் வழி காட்டலையும் மற்றும் கருணையையும் வழங்குவதற்காக-அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, மோஸஸிற்கு நாம் வேதத்தைக் கொடுத்தோம்
[28:45] ஆனால் நாம் பல தலைமுறையினர்களை நிலைநிறுத்தினோம், மேலும் காலம் நீண்ட காரணத்தால், (அவர்கள் விலகிச் சென்றனர்). அன்றியும் நம் வெளிப்பாடுகளை அவர்களிடம் ஓதிக்காட்டிக்கொண்டு, மித்யனின் சமூகத் தாருக்கிடையிலும் நீர் இருக்கவில்லை. ஆனால் நாம் தூதர்களை அனுப்பவே செய்தோம்.