Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 28:47 — சரித்திரம்

இவ்விதமாக, அவர்களுடைய சொந்தச் செயல்களின் விளைவாக ஒரு பேரழிவு அவர் களைத் தாக்கும்போது, “ எங்கள் இரட்சகரே, ஒரு தூதரை நீர் எங்களுக்கு அனுப்பியிருந்தால், நாங்கள் உம்முடைய வெளிப்பாடுகளைப் பின் பற்றியிருப்போம், மேலும் நம்பிக்கையாளர்களாக இருந்திருப்போம்” என்று அவர்கள் கூற முடியாது.

[28:46] அன்றி (மோஸஸை) நாம் அழைத்தபோது சினாய் மலையின் சரிவில் நீர் இருக்கவில்லை. ஆனால் உமக்கு முன்னர் எச்சரிப்பவர் எவரையும் பெற்றுக் கொள்ளாத மக்களை எச்சரிப்பதற்காக, அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, (மனிதர்கள் பால் ) இது உம்முடைய இரட்சகரின் கருணையாகவே உள்ளது.

[28:48] இப்போது நம்மிடமிருந்து சத்தியம் அவர்களிடம் வந்திருப்பதால், அவர்கள், “ மோஸஸிற்குக் கொடுக்கப்பட்டது மட்டும் நமக்கும் கொடுக்கப்பட்டால்!” என்று கூறினார்கள். கடந்த காலத்தில் மோஸஸிற்குக் கொடுக்கப் பட்டவற்றை அவர்கள் நம்ப மறுக்கவில்லையா? அவர்கள், “ இரண்டு (வேதங்களும்) ஒன்றிலிருந்து மற்றொன்று பிரதியெடுக்கப்பட்ட மாயாஜால வேலைகளே” என்று கூறினார்கள். அத்துடன் அவர்கள், “அவை இரண்டிலும் நாங்கள் நம்பிக்கையற்றவர்களாக இருக்கின்றோம்” என்றும் கூறினார்கள்.