Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 28:46 — சரித்திரம்

وَما كُنتَ بِجانِبِ الطّورِ إِذ نادَينا وَلٰكِن رَحمَةً مِن رَبِّكَ لِتُنذِرَ قَومًا ما أَتىٰهُم مِن نَذيرٍ مِن قَبلِكَ لَعَلَّهُم يَتَذَكَّرونَ

அன்றி (மோஸஸை) நாம் அழைத்தபோது சினாய் மலையின் சரிவில் நீர் இருக்கவில்லை. ஆனால் உமக்கு முன்னர் எச்சரிப்பவர் எவரையும் பெற்றுக் கொள்ளாத மக்களை எச்சரிப்பதற்காக, அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, (மனிதர்கள் பால் ) இது உம்முடைய இரட்சகரின் கருணையாகவே உள்ளது.

[28:45] ஆனால் நாம் பல தலைமுறையினர்களை நிலைநிறுத்தினோம், மேலும் காலம் நீண்ட காரணத்தால், (அவர்கள் விலகிச் சென்றனர்). அன்றியும் நம் வெளிப்பாடுகளை அவர்களிடம் ஓதிக்காட்டிக்கொண்டு, மித்யனின் சமூகத் தாருக்கிடையிலும் நீர் இருக்கவில்லை. ஆனால் நாம் தூதர்களை அனுப்பவே செய்தோம்.

[28:47] இவ்விதமாக, அவர்களுடைய சொந்தச் செயல்களின் விளைவாக ஒரு பேரழிவு அவர் களைத் தாக்கும்போது, “ எங்கள் இரட்சகரே, ஒரு தூதரை நீர் எங்களுக்கு அனுப்பியிருந்தால், நாங்கள் உம்முடைய வெளிப்பாடுகளைப் பின் பற்றியிருப்போம், மேலும் நம்பிக்கையாளர்களாக இருந்திருப்போம்” என்று அவர்கள் கூற முடியாது.