Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 28:49 — சரித்திரம்

“நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், பின்னர் இவ்விரண்டையும் விட மேலான வழிகாட்டலைக் கொண்ட வேதத்தை கடவுள்-இடமிருந்து கொண்டு வாருங்கள், அப்போது நான் அதனைப் பின்பற்ற இயலும்” என்று கூறுவீராக.

[28:48] இப்போது நம்மிடமிருந்து சத்தியம் அவர்களிடம் வந்திருப்பதால், அவர்கள், “ மோஸஸிற்குக் கொடுக்கப்பட்டது மட்டும் நமக்கும் கொடுக்கப்பட்டால்!” என்று கூறினார்கள். கடந்த காலத்தில் மோஸஸிற்குக் கொடுக்கப் பட்டவற்றை அவர்கள் நம்ப மறுக்கவில்லையா? அவர்கள், “ இரண்டு (வேதங்களும்) ஒன்றிலிருந்து மற்றொன்று பிரதியெடுக்கப்பட்ட மாயாஜால வேலைகளே” என்று கூறினார்கள். அத்துடன் அவர்கள், “அவை இரண்டிலும் நாங்கள் நம்பிக்கையற்றவர்களாக இருக்கின்றோம்” என்றும் கூறினார்கள்.

[28:50] அவர்கள் உமக்குப் பதிலளிக்கத் தவறினால், பின்னர் அவர்கள் தங்களுடைய சுய அபிப்பிராயங்களையே பின்பற்றுகின்றனர் என்பதை அறிந்து கொள்வீராக. கடவுள்- இடமிருந்து வழிகாட்டல் இன்றி, தங்களுடைய சுய அபிப்பிராயங்களைப் பின்பற்றுபவர்களை விட நெடிய வழிகேட்டில் இருப்பவர் யார்? இத்தகைய தீய மக்களைக் கடவுள் வழிநடத்துவதில்லை.