குர்ஆன் 28:54 — சரித்திரம்
அவர்கள் உறுதிப்பாட்டுடன் தொடர்ந்து இருந்த காரணத்தால், அவர்களுக்கு நாம் இருமடங்கு வெகுமதியை வழங்குகின்றோம். அவர்கள் நல்ல செயல்களைக் கொண்டு தீய செயல்களை எதிர்கொள்கின்றார்கள், மேலும் அவர்களுக்குரிய நமது வாழ்வாதாரங்களில் இருந்து அவர்கள் கொடுக்கின்றார்கள்.
[28:53] அவர்களிடம் இது ஓதிக்காட்டப்பட்டால், அவர்கள், “ நாங்கள் இதில் நம்பிக்கை கொள்கின்றோம். இது நம்முடைய இரட்சகரிடமிருந்துள்ள சத்தியம் ஆகும். இதனைப்பற்றி நாங்கள் கேள்விப்படுவதற்கு முன்னரே, நாங்கள் அடிபணிந்தவர்களாக இருந்தோம்” என்று கூறுவார்கள்.
[28:55] வீணான பேச்சை அவர்கள் செவியேற்கும் பொழுது, அவர்கள் அதனைப் புறக்கணித்து விட்டு மேலும், “எங்கள் செயல்களுக்கு நாங்கள் பொறுப்பாளிகள், மேலும் உங்கள் செயல்களுக்கு நீங்கள் பொறுப் பாளிகள். உங்கள் மீது அமைதி நிலவுவதாக. அறிவில்லாதவர்களைப் போல நடந்து கொள்ள நாங்கள் விரும்பவில்லை” என்று கூறுகின்றார்கள்.