Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 28:56 — சரித்திரம்

நீங்கள் நேசிப்பவர்களை எல்லாம் வழிநடத்த உங்களால் இயலாது. கடவுள் - ஒருவர் மட்டுமே அவருடைய நாட்டத்திற்கிணங்க, மேலும் அவருடைய அறிவிற்கிணங்க வழிகாட்டலுக்குத் தகுதியுடையவர்களை வழி நடத்துகின்றார்.

[28:55] வீணான பேச்சை அவர்கள் செவியேற்கும் பொழுது, அவர்கள் அதனைப் புறக்கணித்து விட்டு மேலும், “எங்கள் செயல்களுக்கு நாங்கள் பொறுப்பாளிகள், மேலும் உங்கள் செயல்களுக்கு நீங்கள் பொறுப் பாளிகள். உங்கள் மீது அமைதி நிலவுவதாக. அறிவில்லாதவர்களைப் போல நடந்து கொள்ள நாங்கள் விரும்பவில்லை” என்று கூறுகின்றார்கள்.

[28:57] அவர்கள், “உமது வழிகாட்டலை நாங்கள் பின் பற்றினால், நாங்கள் அடிக்கடி துன்புறுத்துதலால் அவதியுறுவோம்.” என்று கூறினார்கள். நம்மிடமிருந்தொரு வாழ்வாதாரமாக, அனைத்துக் கனிவர்க்கங்களும் அளிக்கப்படுகின்ற, ஒரு புனித ஆலயத்தை அவர்களுக்காக நாம் நிர்மாணிக்கவில்லையா? உண்மையில், அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை.