Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 28:57 — சரித்திரம்

அவர்கள், “உமது வழிகாட்டலை நாங்கள் பின் பற்றினால், நாங்கள் அடிக்கடி துன்புறுத்துதலால் அவதியுறுவோம்.” என்று கூறினார்கள். நம்மிடமிருந்தொரு வாழ்வாதாரமாக, அனைத்துக் கனிவர்க்கங்களும் அளிக்கப்படுகின்ற, ஒரு புனித ஆலயத்தை அவர்களுக்காக நாம் நிர்மாணிக்கவில்லையா? உண்மையில், அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை.

[28:56] நீங்கள் நேசிப்பவர்களை எல்லாம் வழிநடத்த உங்களால் இயலாது. கடவுள் - ஒருவர் மட்டுமே அவருடைய நாட்டத்திற்கிணங்க, மேலும் அவருடைய அறிவிற்கிணங்க வழிகாட்டலுக்குத் தகுதியுடையவர்களை வழி நடத்துகின்றார்.

[28:58] தங்களுடைய வாழ்க்கையில் நன்றி கெட்டவர்களாக மாறிய பல சமூகத்தாரை நாம் அழித்தோம். அதன் விளைவாக, ஒரு சிலரைத் தவிர, அவர்களுக்குப் பின்னர் எவரும் வசிக்காத பாழடைந்த சின்னங்களாக, இதோ அவர்களுடைய வீடுகள். நாமே அவற்றின் வாரிசுகளாக இருந்தோம்.