Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 28:58 — சரித்திரம்

தங்களுடைய வாழ்க்கையில் நன்றி கெட்டவர்களாக மாறிய பல சமூகத்தாரை நாம் அழித்தோம். அதன் விளைவாக, ஒரு சிலரைத் தவிர, அவர்களுக்குப் பின்னர் எவரும் வசிக்காத பாழடைந்த சின்னங்களாக, இதோ அவர்களுடைய வீடுகள். நாமே அவற்றின் வாரிசுகளாக இருந்தோம்.

[28:57] அவர்கள், “உமது வழிகாட்டலை நாங்கள் பின் பற்றினால், நாங்கள் அடிக்கடி துன்புறுத்துதலால் அவதியுறுவோம்.” என்று கூறினார்கள். நம்மிடமிருந்தொரு வாழ்வாதாரமாக, அனைத்துக் கனிவர்க்கங்களும் அளிக்கப்படுகின்ற, ஒரு புனித ஆலயத்தை அவர்களுக்காக நாம் நிர்மாணிக்கவில்லையா? உண்மையில், அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை.

[28:59] ஏனெனில் உம்முடைய இரட்சகர் எந்தச் சமூகத்தையும், அவர்களுக்கு மத்தியில் நம் வெளிப்பாடுகளை அவர்களுக்கு ஓதிக்காட்ட ஒரு தூதரை அனுப்பாது ஒருபோதும் அழித்து விடுவதில்லை. எந்த ஒரு சமூகத்தையும், அதன் மக்கள் தீயவர்களாக இருந்தாலேயன்றி நாம் ஒருபோதும் அழிப்பதில்லை.