Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 28:59 — சரித்திரம்

ஏனெனில் உம்முடைய இரட்சகர் எந்தச் சமூகத்தையும், அவர்களுக்கு மத்தியில் நம் வெளிப்பாடுகளை அவர்களுக்கு ஓதிக்காட்ட ஒரு தூதரை அனுப்பாது ஒருபோதும் அழித்து விடுவதில்லை. எந்த ஒரு சமூகத்தையும், அதன் மக்கள் தீயவர்களாக இருந்தாலேயன்றி நாம் ஒருபோதும் அழிப்பதில்லை.

[28:58] தங்களுடைய வாழ்க்கையில் நன்றி கெட்டவர்களாக மாறிய பல சமூகத்தாரை நாம் அழித்தோம். அதன் விளைவாக, ஒரு சிலரைத் தவிர, அவர்களுக்குப் பின்னர் எவரும் வசிக்காத பாழடைந்த சின்னங்களாக, இதோ அவர்களுடைய வீடுகள். நாமே அவற்றின் வாரிசுகளாக இருந்தோம்.

[28:60] உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பவை ஒவ்வொன்றும் இந்த வாழ்வின் பொருட்களும், மேலும் அவற்றின் ஆடம்பரங்களுமேயாகும். கடவுள்-இடம் இருப்பவையோ மிகவும் மேலானதாகவும், நிலைத்திருப்பவையாகவும் உள்ளன. நீங்கள் புரிந்து கொள்ள வேண்டாமா?