Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 28:60 — சரித்திரம்

உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பவை ஒவ்வொன்றும் இந்த வாழ்வின் பொருட்களும், மேலும் அவற்றின் ஆடம்பரங்களுமேயாகும். கடவுள்-இடம் இருப்பவையோ மிகவும் மேலானதாகவும், நிலைத்திருப்பவையாகவும் உள்ளன. நீங்கள் புரிந்து கொள்ள வேண்டாமா?

[28:59] ஏனெனில் உம்முடைய இரட்சகர் எந்தச் சமூகத்தையும், அவர்களுக்கு மத்தியில் நம் வெளிப்பாடுகளை அவர்களுக்கு ஓதிக்காட்ட ஒரு தூதரை அனுப்பாது ஒருபோதும் அழித்து விடுவதில்லை. எந்த ஒரு சமூகத்தையும், அதன் மக்கள் தீயவர்களாக இருந்தாலேயன்றி நாம் ஒருபோதும் அழிப்பதில்லை.

[28:61] நிச்சயமாக நிகழ்ந்தேறக் கூடிய நல்லதொரு வாக்குறுதியை நாம் வாக்களித்த ஒருவரும், இந்த வாழ்வின் தற்காலிகப் பொருட்கள் நம்மால் வழங்கப்பட்டுப், பின்னர் மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாள் அன்று நிரந்தரமான அழிவை அனுபவிக்கும் ஒருவனும் சமமா?