குர்ஆன் 28:62 — சரித்திரம்
“ என்னுடன் நீங்கள் அமைத்துக் கொண்ட அந்த இணைத் தெய்வங்கள் எங்கே?” என்று கூறியவாறு, அவர்களை, அவர் அழைக்கின்ற அந்நாள் வரும்.
[28:61] நிச்சயமாக நிகழ்ந்தேறக் கூடிய நல்லதொரு வாக்குறுதியை நாம் வாக்களித்த ஒருவரும், இந்த வாழ்வின் தற்காலிகப் பொருட்கள் நம்மால் வழங்கப்பட்டுப், பின்னர் மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாள் அன்று நிரந்தரமான அழிவை அனுபவிக்கும் ஒருவனும் சமமா?
[28:63] தீர்ப்பிற்கு உள்ளானவர்கள், “ எங்கள் இரட்சகரே, இவர்களைத்தான் நாங்கள் வழிதவறச் செய்தோம்; நாங்களே வழிதவறிச் சென்று விட்டவர்களாக இருந்தக் காரணத்தினால் தான் நாங்கள் அவர்களை வழி தவறச் செய்தோம். இப்போது நாங்கள் எங்களை உமக்கு முற்றிலும் அர்ப்பணித்துக் கொள்கின்றோம். அவர்கள் உண்மையில் எங்களை வழிபட்டுக் கொண்டிருக்கவில்லை” என்று கூறுவார்கள்.