குர்ஆன் 28:7 — சரித்திரம்
மோஸஸின் தாயாருக்கு நாம்: “அவருக்குப் பாலூட்டுவீராக, மேலும் அவருடைய உயிரைக் குறித்து நீர் அச்சம் கொள்ளும் போது, அச்சமோ அல்லது துக்கமோ இன்றி ஆற்றுக்குள் அவரை வீசி விடுவீராக. அவரை நாம் உம்மிடம் திரும்பச் சேர்ப்போம், மேலும் தூதர்களில் ஒருவராகவும் அவரை நாம் ஆக்குவோம்” என்று உள்ளுணர் வளித்தோம்.
[28:6] அத்துடன் பூமியில் அவர்களை ஸ்திரப்படுத்தவும், மேலும் ஃபேரோ, ஹாமான் மற்றும் அவனுடைய படையினர்களுடைய, சொந்த மருந்தை அவர் களையே சுவைக்கச் செய்வதற்காகவும்.
[28:8] எதிரணிக்குத் தலைமை தாங்குவதற்காகவும் மேலும் தங்களுடைய துக்கத்திற்கு ஒரு மூல காரணமாக இருப்பதற்காக மட்டுமே ஃபேரோ வின் குடும்பத்தார் அவரை எடுத்துக் கொண் டனர். அது ஏனெனில் ஃபேரோ, ஹாமான் மற்றும் அவனுடைய படையினர் வரம்பு மீறியவர்களாக இருந்தனர்.