குர்ஆன் 28:8 — சரித்திரம்
எதிரணிக்குத் தலைமை தாங்குவதற்காகவும் மேலும் தங்களுடைய துக்கத்திற்கு ஒரு மூல காரணமாக இருப்பதற்காக மட்டுமே ஃபேரோ வின் குடும்பத்தார் அவரை எடுத்துக் கொண் டனர். அது ஏனெனில் ஃபேரோ, ஹாமான் மற்றும் அவனுடைய படையினர் வரம்பு மீறியவர்களாக இருந்தனர்.
[28:7] மோஸஸின் தாயாருக்கு நாம்: “அவருக்குப் பாலூட்டுவீராக, மேலும் அவருடைய உயிரைக் குறித்து நீர் அச்சம் கொள்ளும் போது, அச்சமோ அல்லது துக்கமோ இன்றி ஆற்றுக்குள் அவரை வீசி விடுவீராக. அவரை நாம் உம்மிடம் திரும்பச் சேர்ப்போம், மேலும் தூதர்களில் ஒருவராகவும் அவரை நாம் ஆக்குவோம்” என்று உள்ளுணர் வளித்தோம்.
[28:9] ஃபேரோவின் மனைவி, “எனக்கும் உமக்கும் மகிழ்ச்சியூட்டக்கூடிய ஒரு கண்டுபிடிப்பாக இது அமையலாம். அவரைக் கொன்று விடாதீர், ஏனெனில் அவர் நமக்கு ஏதேனும் பலனளிக்கக் கூடும், அல்லது நம்முடைய மகனாக அவரை நாம் தத்தெடுத்துக் கொள்ளலாம்” என்று கூறினார். அவர்கள் எதையும் அறிந்திருக்க வில்லை.