குர்ஆன் 28:75 — சரித்திரம்
ஒவ்வொரு சமூகத்திலிருந்தும் ஒரு சாட்சியை நாம் தேர்ந்தெடுப்போம், பின்னர், “உங்களுடைய சான்றினைக் காட்டுங்கள்” என்று கூறுவோம். சத்தியம் அனைத்தும் கடவுள்-க்குரியது என்பதை அப்போது அவர்கள் புரிந்து கொள்வார்கள், அதே சமயம் அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்ட இணைத் தெய்வங்கள் அவர்களைக் கைவிட்டு விடும்.
[28:74] “எனக்குச் சமமாக நீங்கள் இட்டுக்கட்டிக் கொண்ட அந்த இணைத் தெய்வங்கள் எங்கே?,” என்று அவர்களை அவர் கேட்கின்ற அந்நாள் வரும்.
[28:76] (அடிமை மேய்ப்பனான) காரூன் மோஸஸின் சமூகத்தாரில் உள்ளவனாக இருந்து, அவர் களுக்குத் துரோகமிழைத்து அவர்களை அடக்குமுறை செய்தவன் ஆவான். வலிமையான ஒரு கூட்டத்திற்கே கிட்டத்தட்ட மிகவும் கனமாக இருக்கும் அளவிற்கு அதன் சாவிகளைக் கொண்ட ஏராளமான பொக்கிஷங்களை நாம் அவனுக்குத் தந்தோம். அவனுடைய சமூகத்தார் அவனிடம் கூறினர், “ஆணவம் மிகக் கொள்ளாதே; ஆணவம் கொண்டோரைக் கடவுள் நேசிப்பதில்லை.