குர்ஆன் 28:77 — சரித்திரம்
“இவ்வுலகில் உனது பங்கைத் தவறவிடாதவாறு, கடவுள் உன் மீது அருளிய வாழ்வாதாரங்களை மறுவுலகின் வீட்டைத் தேடப் பயன்படுத்திக் கொள். கடவுள் உன்பால் பெருந்தன்மையாக இருந்ததைப் போலவே, பெருந்தன்மையாக நடந்துகொள். தொடர்ந்து பூமியைச் சீர்குலைத்துக் கொண்டிருக்காதே. சீர்குலைப்போரைக் கடவுள் நேசிப்பதில்லை”.
[28:76] (அடிமை மேய்ப்பனான) காரூன் மோஸஸின் சமூகத்தாரில் உள்ளவனாக இருந்து, அவர் களுக்குத் துரோகமிழைத்து அவர்களை அடக்குமுறை செய்தவன் ஆவான். வலிமையான ஒரு கூட்டத்திற்கே கிட்டத்தட்ட மிகவும் கனமாக இருக்கும் அளவிற்கு அதன் சாவிகளைக் கொண்ட ஏராளமான பொக்கிஷங்களை நாம் அவனுக்குத் தந்தோம். அவனுடைய சமூகத்தார் அவனிடம் கூறினர், “ஆணவம் மிகக் கொள்ளாதே; ஆணவம் கொண்டோரைக் கடவுள் நேசிப்பதில்லை.
[28:78] அவன், “இவை அனைத்தையும் என்னுடைய சொந்தச் சாமர்த்தியத்தால் நான் அடைந்தேன்” என்று கூறினான். அவனை விடவும் வலிமை மிகுந்த, மேலும் எண்ணிக்கையில் அதிகமாக இருந்த தலைமுறைகளை கடவுள் அழித்திருக் கின்றார் என்பதை அவன் புரிந்து கொள்ள வில்லையா? (அழிக்கப்பட்ட) அந்த வரம்பு மீறியவர்களிடம் அவர்களுடைய குற்றங்களைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்கப்படவில்லை.