குர்ஆன் 28:78 — சரித்திரம்
அவன், “இவை அனைத்தையும் என்னுடைய சொந்தச் சாமர்த்தியத்தால் நான் அடைந்தேன்” என்று கூறினான். அவனை விடவும் வலிமை மிகுந்த, மேலும் எண்ணிக்கையில் அதிகமாக இருந்த தலைமுறைகளை கடவுள் அழித்திருக் கின்றார் என்பதை அவன் புரிந்து கொள்ள வில்லையா? (அழிக்கப்பட்ட) அந்த வரம்பு மீறியவர்களிடம் அவர்களுடைய குற்றங்களைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்கப்படவில்லை.
[28:77] “இவ்வுலகில் உனது பங்கைத் தவறவிடாதவாறு, கடவுள் உன் மீது அருளிய வாழ்வாதாரங்களை மறுவுலகின் வீட்டைத் தேடப் பயன்படுத்திக் கொள். கடவுள் உன்பால் பெருந்தன்மையாக இருந்ததைப் போலவே, பெருந்தன்மையாக நடந்துகொள். தொடர்ந்து பூமியைச் சீர்குலைத்துக் கொண்டிருக்காதே. சீர்குலைப்போரைக் கடவுள் நேசிப்பதில்லை”.
[28:79] ஒருநாள், முழு அலங்காரத்துடன் தன் சமூகத் தாரிடம் அவன் வந்தான். இவ்வுலக வாழ்வை விரும்பியவர்கள் , “ ஆ, காரூன் அடைந் தவற்றை நாங்கள் பெற்றிருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். உண்மையில், அவன் மிகவும் அதிர்ஷ்டக்காரனாக இருக்கின்றான்” என்று கூறினார்கள்.