குர்ஆன் 29:14 — சிலந்திப் பூச்சி
நாம் நோவாவை, அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம். மேலும் அவர் ஐம்பது குறைவாக,* ஆயிரம் வருடங்கள் அவர் களுடன் வாழ்ந்திருந்தார். அதன்பின்னர், அவர்களுடைய வரம்பு மீறல்களின் காரணமாக அவர்கள் பிரளயத்திற்கு உள்ளானார்கள்.
[29:13] உண்மையில், அவர்கள் தங்களுடைய சொந்தப்பாவங்களையும், அத்துடன் கூடு தலாக மற்ற மக்களின் பாவச்சுமைகளில் எவற்றிற்கு அவர்கள் பொறுப்பாக இருந்தனரோ, அவற்றையும் சேர்த்துச் சுமப்பார்கள். மிகவும் நிச்சயமாக, மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று அவர்களுடைய பொய்க் கூற்றுக் களைப் பற்றி அவர்கள் கேட்கப்படுவார்கள்.
[29:15] நாம் அவரையும் அவருடன் கூட இருந்தவர் களையும் மரக்கலத்தில் ஏற்றி காப்பாற்றி னோம்,மேலும் மக்கள் அனைவருக்கும் ஒரு படிப்பினையாக அதனை நாம் அமைத்தோம்.