குர்ஆன் 29:15 — சிலந்திப் பூச்சி
நாம் அவரையும் அவருடன் கூட இருந்தவர் களையும் மரக்கலத்தில் ஏற்றி காப்பாற்றி னோம்,மேலும் மக்கள் அனைவருக்கும் ஒரு படிப்பினையாக அதனை நாம் அமைத்தோம்.
[29:14] நாம் நோவாவை, அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம். மேலும் அவர் ஐம்பது குறைவாக,* ஆயிரம் வருடங்கள் அவர் களுடன் வாழ்ந்திருந்தார். அதன்பின்னர், அவர்களுடைய வரம்பு மீறல்களின் காரணமாக அவர்கள் பிரளயத்திற்கு உள்ளானார்கள்.
[29:16] ஆப்ரஹாம் தன் சமூகத்தாரிடம் கூறினார், “நீங்கள் கடவுள்-ஐ வழிபடவும், மேலும் அவரிடம் பயபக்தியோடிருக்கவும் வேண்டும். நீங்கள் மட்டும் அறிந்திருந்தால், இதுவே உங்களுக்கு மேலானதாகும்.