Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 29:13 — சிலந்திப் பூச்சி

உண்மையில், அவர்கள் தங்களுடைய சொந்தப்பாவங்களையும், அத்துடன் கூடு தலாக மற்ற மக்களின் பாவச்சுமைகளில் எவற்றிற்கு அவர்கள் பொறுப்பாக இருந்தனரோ, அவற்றையும் சேர்த்துச் சுமப்பார்கள். மிகவும் நிச்சயமாக, மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று அவர்களுடைய பொய்க் கூற்றுக் களைப் பற்றி அவர்கள் கேட்கப்படுவார்கள்.

[29:12] நம்பமறுப்பவர்கள் நம்பிக்கை கொண்டவர் களிடம், “நீங்கள் எங்களுடைய வழியைப் பின்பற்றினால் உங்களுடைய பாவங்களுக்கு நாங்கள் பொறுப்பேற்றுக்கொள்வோம்” என்று கூறினார்கள். உண்மை அல்ல; அவர்களுடைய பாவங்களில் எதையும் அவர்களால் சுமக்க முடியாது. அவர்கள் பொய்யர்களாக இருக்கின்றனர்.

[29:14] நாம் நோவாவை, அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம். மேலும் அவர் ஐம்பது குறைவாக,* ஆயிரம் வருடங்கள் அவர் களுடன் வாழ்ந்திருந்தார். அதன்பின்னர், அவர்களுடைய வரம்பு மீறல்களின் காரணமாக அவர்கள் பிரளயத்திற்கு உள்ளானார்கள்.