குர்ஆன் 29:12 — சிலந்திப் பூச்சி
நம்பமறுப்பவர்கள் நம்பிக்கை கொண்டவர் களிடம், “நீங்கள் எங்களுடைய வழியைப் பின்பற்றினால் உங்களுடைய பாவங்களுக்கு நாங்கள் பொறுப்பேற்றுக்கொள்வோம்” என்று கூறினார்கள். உண்மை அல்ல; அவர்களுடைய பாவங்களில் எதையும் அவர்களால் சுமக்க முடியாது. அவர்கள் பொய்யர்களாக இருக்கின்றனர்.
[29:11] நம்பிக்கை கொண்டோரை மிகவும் நிச்சய மாகக் கடவுள் மேன்மைப்படுத்துவார், மேலும் நயவஞ்சகர்களை மிகவும் நிச்சயமாக அவர் வெளிப்படுத்திவிடுவார்.
[29:13] உண்மையில், அவர்கள் தங்களுடைய சொந்தப்பாவங்களையும், அத்துடன் கூடு தலாக மற்ற மக்களின் பாவச்சுமைகளில் எவற்றிற்கு அவர்கள் பொறுப்பாக இருந்தனரோ, அவற்றையும் சேர்த்துச் சுமப்பார்கள். மிகவும் நிச்சயமாக, மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று அவர்களுடைய பொய்க் கூற்றுக் களைப் பற்றி அவர்கள் கேட்கப்படுவார்கள்.