Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 29:11 — சிலந்திப் பூச்சி

நம்பிக்கை கொண்டோரை மிகவும் நிச்சய மாகக் கடவுள் மேன்மைப்படுத்துவார், மேலும் நயவஞ்சகர்களை மிகவும் நிச்சயமாக அவர் வெளிப்படுத்திவிடுவார்.

[29:10] “நாங்கள் கடவுள் மீது நம்பிக்கை கொண் டோம்,” என்று கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர், ஆனால் கடவுள்-க்காக ஏதேனும் கஷ்டங்களை அவர்கள் அனுபவித்தால், உடனே அவர்கள் மனிதர்களின் துன்புறுத்து தலை கடவுள்-ன் தண்டனையோடு ஒப்பிடுகின்றனர். ஆனால் உமது இரட்சகரின் அருட்கொடைகள் உமது வழியில் வந்தால் “நாங்கள் உங்களோடுதான் இருந்தோம்” என அவர்கள் கூறுகின்றனர். மக்களுடைய ஆழ்மனதின் எண்ணங்களை கடவுள் முற்றிலும் அறிந்திருக்கவில்லையா?

[29:12] நம்பமறுப்பவர்கள் நம்பிக்கை கொண்டவர் களிடம், “நீங்கள் எங்களுடைய வழியைப் பின்பற்றினால் உங்களுடைய பாவங்களுக்கு நாங்கள் பொறுப்பேற்றுக்கொள்வோம்” என்று கூறினார்கள். உண்மை அல்ல; அவர்களுடைய பாவங்களில் எதையும் அவர்களால் சுமக்க முடியாது. அவர்கள் பொய்யர்களாக இருக்கின்றனர்.