குர்ஆன் 29:10 — சிலந்திப் பூச்சி
“நாங்கள் கடவுள் மீது நம்பிக்கை கொண் டோம்,” என்று கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர், ஆனால் கடவுள்-க்காக ஏதேனும் கஷ்டங்களை அவர்கள் அனுபவித்தால், உடனே அவர்கள் மனிதர்களின் துன்புறுத்து தலை கடவுள்-ன் தண்டனையோடு ஒப்பிடுகின்றனர். ஆனால் உமது இரட்சகரின் அருட்கொடைகள் உமது வழியில் வந்தால் “நாங்கள் உங்களோடுதான் இருந்தோம்” என அவர்கள் கூறுகின்றனர். மக்களுடைய ஆழ்மனதின் எண்ணங்களை கடவுள் முற்றிலும் அறிந்திருக்கவில்லையா?
[29:9] எவர்கள் நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்து கின்றனரோ, அவர்களை நிச்சயமாக நன்னெறியாளர்களுடன் நாம் அனுமதிப்போம்.
[29:11] நம்பிக்கை கொண்டோரை மிகவும் நிச்சய மாகக் கடவுள் மேன்மைப்படுத்துவார், மேலும் நயவஞ்சகர்களை மிகவும் நிச்சயமாக அவர் வெளிப்படுத்திவிடுவார்.